அரசு அலுவலகத்தில் லேப்டாப், கேமரா திருட்டு

 

ஈரோடு,நவ.7: ஈரோட்டில் அரசு அலுவலகத்தில் இருந்த லேப்டாப் மற்றும் ஒரு கேமராவை மர்ம நபர்கள் திருடி சென்றனர். ஈரோடு பெருந்துறை சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகே தனியார் வணிக வளாகம் உள்ளது. இங்கு தமிழக அரசின் விதை சான்று மற்றும் அங்கக சான்று விதை ஆய்வு துணை இயக்குநர் அலுவலகம் உள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு துணை இயக்குநர் அலுவலகத்தில் இருந்த ஒரு லேப்டாப்,ஒரு கேமராவை மர்ம நபர்கள் திருடினர்.

பின்னர் தனி நபரின் அலுவலகத்தில் புகுந்து ஒரு லேப்டாப் மற்றும் பணம் ரூ.9 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடினர். அருகில் இருந்த பைனான்ஸ் நிறுவனத்திலும் திருட முயற்சித்தனர். ஆனால் பணம், பொருட்கள் ஏதும் சிக்கவில்லை. இதனால் மர்ம நபர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ஈரோடு தெற்கு போலீசார் நேற்று திருட்டு நடந்த அலுவலகங்களுக்கு சென்று விசாரணை நடத்தி ஆய்வு செய்தனர்.

The post அரசு அலுவலகத்தில் லேப்டாப், கேமரா திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: