செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இயங்கி வருகிறது. இங்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் திருவள்ளுவர் மற்றும் காந்தியடிகள் படங்களை தவிர்த்து மற்ற தலைவர்களின் படங்களை அகற்ற வேண்டும் என சுற்றறிக்கை விடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நீதிமன்றத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் உருவ படத்தை இரவோடு இரவாக நீதிமன்றத்தில் இருந்து அகற்றி உள்ளனர். இதனை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து விட்டு நீதிமன்றம் எதிரே உள்ள செய்யூர் – மதுராந்தகம் செல்லும் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
பார் கவுன்சில் தலைவர் சந்தானம் தலைமையில் நடந்த இந்த சாலை மறியல் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு நீதிமன்ற நடவடிக்கையை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர். தகவலறிந்து வந்த மதுராந்தகம் காவல் கோட்ட கண்காணிப்பாளர் சிவசக்தி மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். போராட்டத்தில் பார் கவுன்சில் துணை தலைவர் கோமதகவேல், செயலாளர் சுரேஷ், பொருளாளர யோகேஸ்வரன், பொன்னிவளவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரபபு ஏற்பட்டது.
The post அம்பேத்கர் படம் அகற்றியதை கண்டித்து வழக்கறிஞர்கள் திடீர் சாலை மறியல்: செய்யூரில் பரபரப்பு appeared first on Dinakaran.