விராலிமலை, மே 12: விராலிமலை, அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர். இதனால் அலுவலகத்தில் பெரும்பாலான மேஜைகள் அலுவலர்கள் இல்லாமல் காலியாக இருந்தன. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் 35 அலுவலர்கள் விடுப்பு எடுத்து 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நேற்று மேற்கொண்டனர்.
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஊராட்சி செயலர்களுக்கு பணி விதிகளை காலதாமதமின்றி வெளியிடுதல் மற்றும் விடுபட்ட உரிமைகளை உடனே வழங்க வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு பணி விதிகளை காலதாமதமின்றி வெளியிடுதல் மற்றும் விடுபட்ட உரிமைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் விராலிமலையில் 6 பேர், அன்னவாசலில் 29 பேர் என மொத்தம் 35 ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் மேற்கொண்டனர். இதனால் பெரும்பாலான மேஜைகள் வெறிச்சோடி காணப்பட்டது. விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மொத்தப் பணியிடமான 65ல் 22 இடம் காலியாக உள்ளதில் 41 அலுவலர்கள் மட்டும் பணியில் உள்ளனர். இதேபோல் அன்னவாசலில் மொத்த பணியிடமான 59ல் தற்போது 19 பணியிடம் காலியாக உள்ளதில் 40 பேர் மட்டும் பணியில் இருக்கும் நிலையில் நேற்று அன்னவாசலில் 29 பேர், விராலிமலையில் 6 பேர் என மொத்தம் 35 பேர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post அன்னவாசல், விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் appeared first on Dinakaran.