சென்னை: திமுக எம்.பி. தயாநிதிமாறன் மீது அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு தொடர்பாக தயாநிதிமாறன் தெரிவித்த கருத்தை எதிர்த்து அமைச்சர் ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார். சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் தயாநிதிமாறன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வலக்கை விசாரித்த நீதிபதிகள் தயாநிதிமாறன் மீது உள்ள அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை வித்தித்துள்ளனர்.
திமுக எம்.பி. தயாநிதிமாறன் மீது அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் தடை
