திருமயம்: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதிகளில் அதிக அளவு மலையடி, கிரஷர் இயங்கி வருகிறது. இந்நிலையில் மலையடியில் இருந்து கிரஷர்களுக்கு முண்டுக்கல் அரசு அனுமதியின்றி எடுத்துச் செல்லப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதனை தொடர்ந்து திருமயம் தாசில்தார் புவியரசன் திருமயம் அருகே உள்ள காட்டுபாவாபள்ளிவாசல் அடுகபட்டி விலக்கு ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக முண்டுக்கல் ஏற்றி வந்த 2 டிப்பர் லாரிகளை பிடித்து சோதனை செய்தார். சோதனையில் அனுமதியின்றி முண்டுக்கல் கொண்டு சென்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து லாரியை முண்டுக்கல்லுடன் தாசில்தார் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அனுமதியின்றி முண்டுக்கல் ஏற்றி சென்ற லாரிகள் பிடிபட்டது appeared first on Dinakaran.