×

மாம்பழத்த அளவா சாப்பிட்டா அமிர்தம் : இல்லாட்டி சர்க்கரை எகிறும், உடம்புல சூடு பறக்கும்

மும்பை:  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அல்போன்சா, லாங்ரா மற்றும் கேசர் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மாம்பழம் விளைகிறது. கிடைக்கின்ற பல்வேறு மாநில மாம்பழங்களின் வகைகளை பொறுத்து, அவற்றை உணவு தயாரிக்க ஓட்டல்கள் பயன்படுத்துகின்றன. மகாராஷ்டிராவில் அல்போன்சா மாம்பழங்கள் பழரசம் தயாரிக்க பயன்படுகின்றன. கர்நாடகாவில் படாமி வகை மாம்பழங்கள்,  “மாவின ஹன்னினா கொஜ்ஜூ”, “மாம்பழ ரசம்” உள்ளிட்ட பல்வேறு வகை உணவை தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. இதேபோல் சவுன்சா, லாங்ரா, தஸ்ஹேரி வகை மாம்பழங்களில் கீர், பீர்னி, ராப்ரி மற்றும் ஷிர்கான்ட் உள்ளிட்ட இனிப்பு வகைகள் தயாரிக்கப்படுகின்றன.

குஜராத்தில் கேசர் மாம்பழங்கள் பிரபலமானவை. இவை ஊறுகாய், சட்னி மற்றும் சண்டா உள்ளிட்டவை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன. பஞ்சாப் மற்றும் டெல்லி மக்கள் மாம்பழங்களை தயிருடன்  சேர்த்து சாப்பிடுகின்றனர். கேரளாவில் கோடை காலத்தில் இறால், மீன் வகைகளுடன் மாம்பழம் சேர்த்து சமைக்கப்படுகிறது.

யாராக இருந்தாலும் அதிக அளவு மாம்பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு கேடு விளைவிக்கும். சரியான அளவு மாம்பழம் சாப்பிடுவது  உடல் எடையை குறைக்க உதவும். பால் பொருட்களுடன் மாம்பழம் சேர்த்து சாப்பிடுவது மற்றும் அதிக அளவு மாம்பழங்களை சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும். மாம்பழத்தில் அதிகளவு ஆன்டி-ஆக்சிடன்டுக்கள் உள்ளன. கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கிறது. மேலும், இவற்றில் அதிக அளவில் இரும்பு, கால்சியம் காணப்படுகின்றன. இதனால் எலும்பு பலப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. அதே நேரத்தில் அதிக மாம்பழம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகரிக்கும். இதனால் சில தோல் வியாதிகள் உள்ளிட்டவை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. மாம்பழத்தில் கிளைசிமிக் குறியீடு அதிகளவில் உள்ளதால் உடனடியாக ரத்த சர்க்கரை மற்றும் ரத்த இன்சுலின் அளவை அதிகரித்துவிடும். அதனால், அளவாக சாப்பிட்டா அமிர்தமாக இருக்கும்.

ஆர்கானிக் மவுசு:

கடந்த சில ஆண்டுகளாக ஆர்கானிக் மாம்பழங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. மக்கள் ஆர்கானிக் பழத்தில் உள்ள நன்மைகள் குறித்து புரிந்து கொண்டுள்ளனர். ஆர்கானிக் மாம்பழங்களை கார்பைடு கற்களை கொண்டு செயற்கயைாக பழுக்க வைக்க முடியாது. இவை தேவையான கால அளவை எடுத்துக் கொண்டே பழுக்கின்றன. இதனால் அவற்றில் இயற்கையாக இனிப்பு தன்மை அதி–்கரிக்கிறது. இதுதான் அவற்றிற்கு நிறம் மற்றும் வாசனையை தருகின்றன.

Tags :
× RELATED திருப்பதி கோயில் பிரசாத லட்டில்...