சென்னை: பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய தமிழக அரசு மேலும் 5 ஆண்டுகள் அவகாசம் அளித்தது. 1.1.2000க்கு முன் பிறந்த குழந்தைகளின் பெயரை பதிவு செய்ய தவறியவர்களுக்கு மேலும் 5 ஆண்டுகள் அவகாசம் அளித்துள்ளது. 31.12.2019ல் முடிந்த நிலையில் இந்திய தலைமைப்பதிவாளர் மேலும் 5 ஆண்டு அவகாசம் வழங்கியுள்ளார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பிறப்பு சான்றிதழில் குழந்தை பெயர் பதிய 5 ஆண்டு அவகாசம்: தமிழக அரசு
