×

அச்சக தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

பண்ருட்டி, ஜூன் 5: பண்ருட்டி அடுத்த இருளங்குப்பத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (45), பிரிண்டிங் மெஷின் ஆப்ரேட்டர். இவரது மனைவி கவிதா (43). இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். செல்வகுமார் மது அருந்தும் பழக்கம் உள்ளவர். பண்ருட்டி எல்.ஆர் பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் கடன் தொல்லை தாங்காமல் நேற்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டில் பாத்ரூமில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரித்து வருகின்றனர்.

The post அச்சக தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Panruti ,Selvakumar ,Irulankuppam ,Kavita ,Palayam… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...