நாகர்கோவில், மார்ச் 8: குமரி மாவட்ட உணவுபாதுகாப்புதுறை சார்பில் நாகர்கோவில் வட்டாரத்தில் உள்ள 97 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மைய, அங்கன்வாடி பணியாளர்களுக்கான உணவு பாதுகாப்பு பயிற்சி மற்றும் சான்று அளித்தல் நிகழ்ச்சி இருளப்பபுரம் நகராட்சி பூங்காவில் அமைந்துள்ள குழந்தைகள் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மையத்தில் நடந்தது. உணவு பாதுகாப்பு அலுவலர் குமாரபாண்டியன் பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். பயிற்சியில் உணவு தயாரிக்கும் இடத்தின் உள்கட்டமைப்பு, பூச்சி கட்டுப்பாடு, உணவு பொருள் மூலப்பொருள் மேலாண்மை,உணவு தயாரிக்க பயன்படுத்தும் நீர் மேலாண்மை, பணியாளர் சுத்தம், பயிற்சி மற்றும் பரிசோதனை குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த பயிற்சி பரிட்ச்சன் என்ற நிறுவனம் மூலம் நடத்தப்பட்டது. பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மைய உணவு பாதுகாப்பு சான்றிதழ் அளிக்கப்பட்டது. இதில் அங்கன்வாடி நாகர்கோவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் சுஜி, மேற்பார்வையாளர் இந்திரா காந்தி, பரிட்ச்சன் நிறுவன பயிற்சியாளர் உதய குமார், உணவு பாதுகாப்பு அலுவலர் சக்தி முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post அங்கன்வாடி பணியாளர்களுக்கு சுகாதாரமாக உணவு தயாரிக்க பயிற்சி உணவு பாதுகாப்புத்துறை வழங்கியது appeared first on Dinakaran.