×

கணவரை பிரிந்து வாழும் நடிகை விநோத நோயால் கடும் பாதிப்பு

ஹவாய்: டி.வியில் ‘தி சீக்ரெட் லைவ்ஸ் ஆஃப் மார்மன் வைவ்ஸ்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான மிக்கேலா மேத்யூஸ் (26), கடந்த சில வருடங்களாகவே ‘சிஐஆர்எஸ்’ என்ற விநோத நச்சு பாதிப்பால் கடுமையாக அவதிப்பட்டு வந்தார். இந்நோயின் பாதிப்பால் அவரது நரம்பு, தோல், முடி, மூளை, கல்லீரல், ஹார்மோன்கள் சிதைந்து வந்தது.

குறிப்பாக, அவர் வசித்து வந்த உட்டா பகுதியிலுள்ள வீட்டில் இருந்த நச்சு பூஞ்சைகள் இந்நோயை தீவிரப்படுத்தியது. தனது 4 குழந்தைகளை பராமரிக்கக்கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட அவர், கடந்த மார்ச் மாதம் முதற்கொண்டு தனது கணவர் ஜேஸ் டெர்ரியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது உடல்நிலையை மேம்படுத்த ஹவாய் தீவுக்கு மிக்கேலா மேத்யூஸ் குடிபெயர்ந்துள்ளார்.

உட்டா பகுதியை விட்டு வெளியேறி தனது 2 குழந்தைகளுடன் ஹவாய் தீவுக்கு சென்றடைந்த அவர், அங்குள்ள தூய்மையான காற்று மற்றும் தட்பவெப்ப நிலை தனது நோயை குணப்படுத்தும் என்று நம்புகிறார். இதுகுறித்து அவர், ‘இந்நோய் எனது வாழ்க்கையையே சீரழித்துவிட்டது. இந்த புதிய சூழ்நிலையில் எனது உடல்நிலை தேறும் என்று நம்புகிறேன்’ என்று உருக்கமாக தெரிவித்தார். தற்போது தற்காலிகமாக ஒரு சிறிய விடுதியில் தங்கியிருக்கும் அவர்,  அங்கேயே இருந்து நீண்ட காலம் சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

Tags : Huawei ,T. Michaela Matthews ,Utah ,
× RELATED புதிய காதலியுடன் ஊர் சுற்றும் தமன்னாவின் முன்னாள் காதலன்