மும்பை: இந்தியில் ஒளிபரப்பான ‘தி லஸ்ட் ஸ்டோரிஸ்’ என்ற வெப்தொடரில் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்தபோது தமன்னா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா இருவரும் நிஜமாகவே காதலிக்க தொடங்கினர். இதையடுத்து பல்வேறு இடங்களில் டேட்டிங் செய்ததுடன், திருமணம் வரை அவர்களது காதல் பயணம் தொடர்ந்தது. ஆனால், திடீரென்று இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இந்நிலையில், இந்தி நடிகை ஆலியா குரேஷியை விஜய் வர்மா காதலித்து வருகிறார். பல்வேறு இடங்களில் அவர்கள் இணைந்து வருகின்றனர்.
சமீபத்தில் மும்பை உணவகம் ஒன்றில் இருந்து விஜய் வர்மாவும், ஆலியா குரேஷியும் வெளியே வரும் காட்சிகள் இணையத்தில் வைரலானது. ஆலியா குரேஷி மும்பையை சேர்ந்த பாடகி, நடிகை மற்றும் பாடலாசிரியர். ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ என்ற இந்தி படத்தில் திரைக்கதை எழுதும் குழுவில் பணியாற்றி இருக்கிறார். தனி இசை ஆல்பம் மூலம் ஆலியா குரேஷி, ‘ஜல்லி’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
