×

காவிரி விவகாரம்: நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினால் உச்ச நீதிமன்ற உத்தரவு வீணாகிவிடும் – துரைமுருகன் எச்சரிக்கை

வேலூர்: முதல்வர் எதற்காக கர்நாடகா செல்கிறார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. காவிரி பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம் அல்லது ஒழுங்காற்றுக்குழுவைத்தான் நாட வேண்டும். நேரடியாகச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வீணாகிவிடும் என்று திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது பேசிய அவர், எம்.ஜி.ஆர். கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்திய காலம் என்பது நீதிமன்ற உத்தரவு இல்லாத காலம். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நம்மிடம் இருக்கும்போது நாம் போய் கெஞ்ச வேண்டிய அவசியமில்லை. மேகதாது மற்றும் காவிரி நீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளைக் கூட்டி ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். முதலமைச்சர் கர்நாடகா சென்று வந்த பின்னர்தான் என்ன நடக்கிறது என்பது தெரியவரும் என்று அவர் கூறினார்.

Tags : VAIN SUPREME COURT ,DURAIMURUGAN WARNS Vellore ,Karnataka ,Supreme Court ,
× RELATED ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி...