×

நெல்லையப்பர் கோயிலில் நாளை மறுநாள் நடைபெறும் ஆனித் திருவிழாவில் சாதி சின்னங்களை பயன்படுத்த தடை

 

நெல்லை: நெல்லையப்பர் கோயிலில் நாளை மறுநாள் நடைபெறும் ஆனித் திருவிழாவில் சாதி சின்னங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. மீறி பயன்படுத்தினால் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாநகர கமிஷனர் தேஷ்முக் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தின் வரலாற்று சிறப்பு மிக்க நெல்லை டவுண் பகுதியில் உள்ள நெல்லையப்பர் காந்திமதியம்மாள் கோவில் ஆனிப்பெருந் தேரோட்டத் திருவிழா வரும் ஜூன் 28-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற உள்ளது.

இந்தத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், நெல்லை டவுண் பகுதியில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏதும் நிகழாமல் அமைதியான முறையில் தேரோட்டம் நடைபெறுவதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் இன்று ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “தேரோட்ட திருவிழாவில் 1,200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தேர் திருவிழாவின்போது சாதி ரீதியான கொடி, சின்னங்கள், டி-சர்ட்டுகள், கயிறுகள் உள்ளிட்ட எதையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சமூக வலைதளத்தில் சாதி ரீதியான பதிவுகளை வெளியிட்டது தொடர்பாக நெல்லை டவுண் காவல் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த தேர் திருவிழாவில் சாதி அடையாளங்களை பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது. இதை மீறி யாராவது செயல்பட்டால், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

Tags : Anith festival ,Nellaiappar temple ,Nellai ,Municipal Commissioner ,Deshmukh ,
× RELATED அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு...