×

கனமழை காரணமாக அசாம் கிராமங்களை சூழ்ந்த வெள்ளம்..! மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்…

திஸ்புர்: வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் அண்டை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, அசாமின் பல மாவட்டங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

இதனால் பலநூறு கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை ஆறுகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதால், நூற்றுக்கணக்கான கிராமங்கள் மற்றும் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் வெள்ளப் பெருக்கினால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, மக்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன

அதே போல ஆறுகளின் மேல்நிலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு திடீரென அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, அசாம் அரசு வெள்ளத் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

 

Tags : Assam ,Thispur ,northeastern ,Arunachal Pradesh ,
× RELATED போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு...