×

இளம்பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி: வாலிபர்களுக்கு வலை

 

வாழப்பாடி, ஜூன் 26: வாழப்பாடி அருகே கொட்டவாடி ஊராட்சியை சேர்ந்தவர் வெங்கடேசன், விவசாயி. இவரது மனைவி புவனேஸ்வரி(24). இவர் நேற்று மாலை, தோட்டத்தில் கறவை மாடுகளுக்கு தீவன புல் அறுக்க சாலையோரம் நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக டூவீலரில் வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள், புவனேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது சுதாரித்து ெகாண்ட பெண் நகையை இறுக்கமாக பிடித்து கொண்டார். இதனால், நகையை பறிக்க முடியாமல் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புவனேஸ்வரி புகார் கொடுத்ததன் பேரில், அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி, மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Vazhapadi ,Venkatesan ,Kotavadi panchayat ,Bhuvaneswari ,
× RELATED போக்சோ சட்டத்தில் 1000 ஆசிரியர்கள்...