×

சீரான மின்விநியோகம் இல்லாததால் பயிர்கள் கருகும் அபாயம் – விவசாயிகள் புகார்

திருவாரூர்: டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் பகுதியில் சீரான மின்விநியோகம் இல்லாததால், போதுமான தண்ணீரின்றி பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர். மேட்டூர் அணை திறக்கப்படாததால் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் சுமார் 40,000 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சூழலில் சீரான மின் வினியோகம் செய்யப்படாததான் காரணமாக பயிர்கள் கருகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நடப்பாண்டில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் ஜூன் 12 அன்று குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது சந்தேகமாக உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 40,000 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு ,மற்றும் நடவு செய்யப்பட்டு உள்ளது. ஆழ்குழாய் கிணறுகள் உள்ள விவசாயிகள் மட்டுமே குறுவை சாகுபடிக்காக பயிர் வைத்து உள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல், வலங்கைமான் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் லோ-வோல்டேஜ் எனப்படும் குறைந்த மின்னழுத்தத்துடன் மின்சாரம் வழங்படுவதால் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச உதவும் மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதாவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக வயலுக்கு போதிய தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழல் நிலவுவதாகவும், இதனால் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர். இதனிடைய விரைவில் இந்த பிரச்சனை சரி செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள்.

Tags : Thiruvarur ,Delta ,Matur Dam ,
× RELATED அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவை...