- பி.சண்முகம்
- புதுக்கோட்டை
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- மார்க்சிஸ்ட்
- மாநில செயலாளர்
- திமுக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இந்தியா
புதுக்கோட்டை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் புதுக்கோட்டையில் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தற்போது இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒத்த கருத்துடைய பிரச்சனையில் திமுகவோடு இணைந்து போராடும். இந்தியா கூட்டணியில் தான் இடதுசாரி கட்சிகள் உள்ளது. இந்தியா கூட்டணியில் திமுக நிலை குறித்து விரைவில் தெரியும். அதன் பின்னர் வேறு கட்சிகள் சேருகின்றனவா என்பது தெரியும்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கடந்த ஆட்சியின் நிலைபாடு தொடரும் என்று சட்ட அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளதை வரவேற்கிறோம். அமித் ஷா, மோடியின் ஆசியோடு தான் அண்ணாமலை இயக்கத்தை தொடங்கி இருக்கிறார். பாஜ தமிழ்நாட்டில் நுழைய முடியவில்லை என்பதற்காக வேறொரு பேரில் அண்ணாமலையை வைத்து நுழைய முயற்சிக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ்சின் 2500க்கும் மேற்பட்ட அமைப்புகளில் அண்ணாமலை ஆரம்பித்திருக்க இயக்கமும் ஒன்று.
ஜனாதிபதி ஆட்சி அமைந்து விடக்கூடாது என்பதால் தான் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தோம். மக்கள் நலன் சார்ந்த பிரச்னையில் திமுகவோடு சேர்ந்து போராட தயாராக உள்ளோம். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உடனடியாக தீர்ப்பதற்கு புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
