- பினராயி விஜயன்
- திருவனந்தபுரம்
- அமலாக்க இயக்குநரகம்
- தீவிர மோசடி விசாரணைப் பிரிவு
- வீணா விஜயன்
- கேரளா
- முதல் அமைச்சர்
- கொச்சி, சிஎம்ஆர்எல்
திருவனந்தபுரம்: கொச்சியில் உள்ள சிஎம்ஆர்எல் என்ற தாது மணல் நிறுவனத்திடம் இருந்து ரூ. 2.78 கோடி பணம் பெற்ற விவகாரம் தொடர்பாக கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் மீது அமலாக்கத்துறை மற்றும் தீவிர மோசடி விசாரணை அலுவலகம் வழக்கு பதிவு செய்தது. கடந்த சில தினங்களுக்கு முன் பினராயி விஜயனின் கண்ணூர் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள வீடுகள், வீணா விஜயனின் கணவரும், முன்னாள் அமைச்சருமான முகம்மது ரியாசின் கோழிக்கோட்டில் உள்ள வீடு உள்பட 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்நிலையில் வீணா விஜயனிடம் விசாரணை நடத்த அவருக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.
