×

கெயிலை மிஞ்சிய வைபவ்: 14ஆண்டு சாதனை தகர்ப்பு

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய இளம்புயல் வைபவ் சூர்யவன்ஷி (15), 29 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 12 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 97 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் வைபவ் விளாசிய சிக்சர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்தது. இதனால், ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரராக இதுவரை திகழ்ந்து வந்த கிறிஸ் கெயிலின் சாதனையை வைபவ் முறியடித்தார்.

கடந்த 2012ம் ஆண்டு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஆடிய கிறிஸ் கெயில் 59 சிக்சர்களை விளாசி சாதனை படைத்தார். 14 ஆண்டுக்கு பின் அந்த சாதனை வைபவால் தகர்த்தெறியப்பட்டுள்ளது. ஒரு ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில், கிறிஸ் கெயில் 2ம் இடத்திலும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் ஆந்த்ரே ரஸல் (2019ம் ஆண்டு, 52 சிக்சர்) 3ம் இடத்திலும் உள்ளனர்.

Tags : Vaibhav ,Gayle ,Sunrisers Hyderabad ,Vaibhav Suryavanshi ,Rajasthan Royals ,
× RELATED ஐபிஎல் 2026 எலிமினேட்டர் சுற்று:...