×

சிறுத்தை தாக்கி யானை பலி

பாலக்காடு: மலப்புரம் அருகே சிறுத்தை தாக்கி பெண் யானை உயிரிழந்தது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் அருகே கேரள-தமிழக எல்லை நாடுக்காணி மலைப்பாதையில் சுமார் 10 வயதுடைய பெண் காட்டு யானை காயங்களுடன் இறந்து கிடந்தது. இதனை நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் பார்த்தனர். இதையடுத்து அவர்கள் ஆய்வு செய்தபோது, யானையை சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்ததும், உடலின் பல பாகங்களை சிறுத்தை தின்றுள்ளதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து வனத்துறை காவலர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அப்பகுதிக்கு வந்த நிலம்பூர் வனத்துறை கால்நடை மருத்துவர் ஷியாம் மற்றும் அதிகாரிகள் விசாரணை செய்தனர். தொடர்ந்து யானை சடலத்தை உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து அடர்ந்த வனப்பகுதிக்குள் யானை உடலை அடக்கம் செய்தனர்.

Tags : Malappuram ,Kerala-Tamil border ,Nadkani mountain road ,Nilampur, Kerala ,
× RELATED அமீரகம், ஸ்வீடன், நார்வே உட்பட 5 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்