×

எரிபொருள் விலை நிர்ணயித்திற்கும், தேர்தல்களுக்கும் சம்பந்தம் இல்லை – மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர்

டெல்லி: நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் பற்றாக்குறை எதுவும் இல்லை என்றும், LPG உற்பத்தியை மத்திய அரசு நாளொன்றுக்கு 35,000-36,000 டன்களிலிருந்து 54,000 டன்களாக அதிகரித்து இருப்பதாகவும் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறி இருக்கிறார்.

CII-ன் வருடாந்திர வணிக உச்சிமாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் பூரி விரைவில் எரிபொருள் விலைகள் உயர கூடும் என்பதை சூசகமாக தெரிவித்தார். அதே நேரம் 5 மாநிலங்களில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல்களின் காரணமாகவே எரிபொருள் விலை உயர்வு அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.

மாநாட்டில் பேசிய ஹர்தீப் சிங் பூரி, கடந்த 75 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது; ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக நாங்கள் எரிபொருள் விலைகளை உயர்த்தவில்லை. உலகிலேயே எரிபொருள் விலைகளை உயர்த்தாத ஒரே நாடு இந்தியா தான். தேர்தல்கள் முடிந்து விட்டதால், இப்போது விலைகள் உயர்த்தப்பட உள்ளதாக மக்கள் நினைத்து கொள்கிறார்கள். ஆனால் கடைசியாக இங்கே எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டது 2022-ஆம் ஆண்டில் தான். அதற்கு பிறகு பொதுத்தேர்தல் மற்றும் மாநில அரசு தேர்தல்களும் நடைபெற்றுள்ளனவே என்று சுட்டி காட்டினார். எரிபொருள் விலைகள் உயரவே உயராது என்று நான் கூறவில்லை. எரிபொருள் விலைகளுக்கும் தேர்தல்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றே நான் கூறுகிறேன் என்று ஹர்தீப் சிங் பூரி கூறினார்.

 

Tags : Union Petroleum ,Minister ,Delhi ,Hardeep Singh Puri ,CII ,
× RELATED சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிர்ச்சி – தர்பூசணி சாப்பிட்ட சிறுவன் பலி