×

பார் ஊழியர் திடீர் சாவு

 

சென்னை, மே 7: சென்னை கொல்லப்பாக்கம் எம்ஆர்கே நகரை சேர்ந்தவர் சந்தானம் (45). இவர் மதுரை பழங்காநத்தத்தில் உள்ள மனமகிழ் மன்றத்தில் பார் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த மே 4ம் தேதி நள்ளிரவு அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கினார். அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சந்தானம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மதுரை சுப்ரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Chennai ,Santhanam ,Chennai Kollapakkam MRK Nagar ,Manamakizh ,Forum ,Madurai ,
× RELATED பயணிகளின் வசதிக்காக கூடுதல்...