- 1009வது ஜெயந்தி கொண்டாட்டம்
- ஸ்ரீராமானுஜர்
- Thirumani
- திருப்பள்ளியூர் திருப்பதி கோயில்
- குன்னம்
- புலியூர் திருப்பதி கோயில்
- தலப்புலியூர்
- திருமாஞ்சனை
- ஆரதி
குன்னம், ஏப். 25: குன்னம் அருகே உள்ள கீழப்புலியூரில் அமைந்துள்ள புலியூர் திருப்பதி கோவிலில் ஸ்ரீராமானுஜரின் 1009வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீராமானுஜரின் உற்சவர் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் பின்னர் திருமஞ்சன உற்சவம், தாமரை மலர்மாலை அணிவித்து ஆரத்தி நடைபெற்றது. அப்போது ராமானுஜ நூற்றந்தாதி பாராயணம் செய்யப்பட்டது.பிறகு ராமானுஜரின் உற்சவ சிலை பல்லக்கில் வைக்கப்பட்டு மேளதாளம் முழங்க கோவில் பிரகார உலா நடைபெற்றது,
இதில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவில் பிரதான பட்டாச்சாரியார் நரசிம்ம பட்டர், ராமானுஜரின் உற்சவர் திருமேனியை பிரதிஷ்டை செய்து வைத்தார். இதில் பெரம்பலூர், கீழப்புலியூர், சிறுகுடல், எழுமூர், முருக்கன்குடி உள்பட சுற்றுப்புற பகுதிகளைச்சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ராமானுஜர் மற்றும் ஸ்ரீதேவி, பூமாதேவி, பத்மாவதி கோதாதேவி சமேத வெங்கட வரதராஜ பெருமாளை தரிசித்தனர்.விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை ஸ்தானிகம் கோபாலன் பட்டாச்சாரியார், ஜோதிடவியல் மற்றும் வாஸ்து நிபுணர் ஸ்ரீராமன் ஆதித்யா, ஸ்ரீகாந்த் பட்டாச்சாரியார் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
