- சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருவிழா
- பெரம்பலூர்
- மதுரகாளியம்மன் கோயில்
- சிறுவாச்சூர், பெரம்பலூர் மாவட்டம்
- சிலப்பதிகர கண்ணகி
பெரம்பலூர், ஏப்.21: புகழ்பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் பெருந்திருவிழா இன்று (21ம் தேதி) இரவு பூச்சொரிதலுடன் தொடங்குகிறது. பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் அருள்மிகு மதுரகாளியம்மன் கோயில் உள்ளது. சிலப்பதிகார கண்ணகியின் சினம் தனித்த ஸ்தலமாகக் கருதப்படும் இந்தக் கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆதி சங்கரர் வழிபாடு செய்து பாடல் பெற்ற திருத்தலமாக விளங்கிவரும் இந்த கோயிலின் ஆண்டு பெருந்திருவிழா இன்று (21ம் தேதி) காலை 11 மணிக்கு மூலவர் அபிஷேகம் உச்சிகால பூஜைக்கு பிறகு இரவு 11 மணிக்கு பூச்சொரிதலுடன் தொடங்குகிறது. நாளைக் காலை 10 மணிவரை சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வரும் பக்தர்களை கொண்டு பூச்சொரிதல் நடைபெறுகிறது.
