- அரியலூர் மாவட்டம்
- Jayankondam
- தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026
- சமாஜ்வாடி
- விஷ்வேஷ் பா. சாஸ்திரி
- சட்டம் ஒழுங்கு காவல் துறை
- தடை அமலாக்க பிரிவு
ஜெயங்கொண்டம்,ஏப்.22: தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க, அரியலூர் மாவட்ட எஸ்பி விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி சட்ட ஒழுங்கு காவல் துறையினர் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் அரியலூர் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி 20,21 தேதிகளில் ஆகிய இரு தினங்களில் மட்டும் அரியலூர் மாவட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினரால் 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இக்குற்றத்தில் ஈடுபட்ட 44 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1763 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
