×

தென்கொரியா அதிபர் இந்தியா வருகை : பிரதமர் மோடியுடன் ஆலோசனை

புதுடெல்லி: இந்திய மற்றும் தென்கொரியா இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை 2030ஆம் ஆண்டிற்குள் 4 லட்சம் கோடியாக உயர்த்த இரு நாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளன. 8 ஆண்டுகளுக்கு பிறகு அரசு முறை பயணமாக இந்தியா வரும் முதல் தென் கொரிய அதிபர் லீ ஜே-ம்யுங் ஆவார். பிரதமர் மோடியை டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

வர்த்தகம், கப்பல் கட்டுதல், செயற்கை நுண்ணறிவு மற்றும் செமி கண்டெக்டர் ஆகிய துறைகளில் உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்த இரு தலைவர்களும் டிஜிட்டல் பாலத்தை உருவாக்கவும் ஓராண்டுக்குள் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி, கொரிய அதிபரின் வருகை இரு நட்டு உறவிலும் புதிய மைல்கல் என்றும் சிப் முதல் கப்பல்கள் வரை அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பு வலுப்படும் என்று தெரிவித்தார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இரு நாடுகளுக்கும் இடையை இருந்த கலாச்சார தொடர்ப்புகளை நினைவுகூர்ந்த அவர் தற்போது இந்தியாவில் கொரிய இசை மற்றும் நாடகங்களுக்கு உள்ள வரவேற்ப்பையும் சுட்டிக்காட்டினார்.

பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய புதிய குழுக்கள் அமைக்கப்படுவதாகவும், கொரிய நிறுவங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க பிரத்யேக தொழில்துறை நகரங்கள் நிறுவப்படும் என்றும் பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Tags : President ,South Korea ,India ,Modi ,New Delhi ,Lee ,
× RELATED ஹிந்தியில் வெளியான படத்தின் மோசடி...