×

திலக் வர்மா அதிரடி சதம் மும்பை அணி வெற்றி

 

அகமதாபாத்: குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியில் நேற்று, மும்பை அணி வெற்றிப் பெற்றது..  ஐபிஎல் தொடரின் 30வது போட்டி அகமதாபாத் நகரில் நேற்று நடந்தது. அதில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து, மும்பை அணியின் குவின்டன் டிகாக், டேனிஷ் மலெவர் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

காகிஸோ ரபாடா வீசிய 2வது ஓவரில் டேனிஷ் (2 ரன்), 4வது ஓவரில் டிகாக் (13 ரன்) அடுத்தடுத்து வீழ்ந்து அதிர்ச்சி தந்தனர். அடுத்து வந்த நமன் திர் சற்று தாக்குப்பிடித்து ஆடினார். இருப்பினும், சூர்யகுமார் யாதவ், ரபாடா பந்தில் 15 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த நமன் திர் (45 ரன்), பிரசித் கிருஷ்ணா வீசிய 13வது ஓவரில் ஆட்டமிழந்தார். பின், திலக் வர்மா, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இணை சேர்ந்தனர். இவர்கள் சிறப்பாக ஆடி 38 பந்துகளில் 81 ரன் சேர்த்த நிலையில் ஹர்திக் (15 ரன்) அவுட்டானார்.

20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்தது. திலக் வர்மா (45 பந்து, 7 சிக்சர், 8 பவுண்டரி, 101 ரன்), ஷெர்பேன் ரூதர்போர்ட் களத்தில் இருந்தனர். குஜராத் தரப்பில் ரபாடா 3, பிரசித் கிருஷ்ணா, முகம்மது சிராஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.இதையடுத்து, களம் இறங்கிய குஜராத் அணி 15.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 100 ரன்களை மட்டுமே எடுத்தது.  இதன் மூலம் 99 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிப் பெற்றது.

Tags : Tilak Verma ,Mumbai ,Ahmedabad ,IPL T20 ,Gujarat Titans ,IPL ,Mumbai Indians ,
× RELATED 10 இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ்...