×

ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது

செய்யாறு, ஏப்.19: செய்யாறு அடுத்த மோரணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காண்டீபன் நேற்று முன்தினம் பிற்பகல் காஞ்சிபுரம்-ஆற்காடு சாலை பெருங்கட்டூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள சர்ச் அருகே பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறாக நின்று ஒரு வாலிபர் ரகளையில் ஈடுபட்டார். இதனால் அவரை அங்கிருந்து செல்லும்படி எச்சரித்தார். ஆனால் அவர் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார். இதனால் அவரை பிடித்து விசாரித்ததில், பெருங்கட்டூர் கிராமத்தை சேர்ந்த வேலன்(20), சென்ட்ரிங் ெதாழிலாளி என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து வேலனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Cheyyar ,Moranam ,Police Inspector ,Kandeepan ,Perunkattur ,Kanchipuram-Arcada Road ,
× RELATED அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள்...