- குருவாயூர்
- பாலக்காடு
- கொச்சி
- குருவாயூர் கிருஷ்ணா கோயில்
- சித்திரை விஷுக்கனி திருவிழா
- தீபக் நாராயண்
- பாலரிவட்டம்
- குருவாயூர் கிருஷ்ண கோவில்…
பாலக்காடு, ஏப். 17: குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்கு கொச்சியை சேர்ந்த பக்தர் ஒருவர் யானையை காணிக்கை செலுத்தி குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் வழிபட்டார். சித்திரை விசுக்கனி திருநாளான நேற்று கொச்சி பாலாரிவட்டத்தை சேர்ந்த தீபக் நாராயணன் தனது குடும்பத்தினருடன் குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்கு யானையை காணிக்கையாக வழங்கினார்.
யானைக்கு கோயில் பிரசாதமாக பழ வகைகள் வழங்கப்பட்டது.விஷேச பூஜைகளும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தேவஸ்தான சேர்மன் கோபிநாத், தேவஸ்தான நிர்வாக்ககுழு உறுப்பினர் மனோஜ், நிர்வாகி அருண்குமார், ஜீவதனம் துணை நிர்வாகி ராதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
