×

ஐயப்பன் கோயிலில் விசு கனி உற்சவம்

மஞ்சூர், ஏப். 16: மஞ்சூர் ஐயப்பன் கோயிலில் விஷூ கனி உற்சவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் நேற்று விஷூ கனி உற்சவம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு அதிகாலையில் சுவாமிக்கு நெய், பால், இளநீர், சந்தனம், பண்ணீர் உள்பட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதை தொடர்ந்து சுவாமிக்கு பல வகையிலான பழங்கள் படைக்கப்பட்டு கனி கானும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கன்னி மூல கணபதி, சத்திய நாகராஜர் சன்னதிகளிலும் அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதேபோல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கோயில்களிலும் விஷூ கனியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

 

Tags : Vishu Kani Utsavam ,Ayyappan Temple ,Manjoor ,Manjoor Ayyappan Temple ,Manjoor Dharma Sastha Ayyappan Temple ,Nilgiris ,
× RELATED குன்னூரில் சுற்றுலா பயணிகளை கவர சிம்ஸ் பூங்காவில் பழச்சாறு விற்பனை