×

எடப்பாடி, பியூஸ் கோயல், அண்ணாமலை ஆலோசனை

நாகர்கோவில்: நாகர்கோவிலில் நேற்று மாலை நடைபெற்ற பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி நேற்று காலை மதுரையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடி வந்து, பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகை தந்தார்.

கன்னியாகுமரி வந்திறங்கிய அவரை, அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான தளவாய் சுந்தரம், முன்னாள் அமைச்சர் பச்சைமால் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து, கன்னியாகுமரியில் இருந்து கார் மூலம் நாகர்கோவில் வந்த எடப்பாடி பழனிசாமி, அங்கு ஓட்டலில் ஓய்வெடுத்தார்.

இதே ஓட்டலில். ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், அண்ணாமலை உள்ளிட்டோரும் தங்கி இருந்தனர். மூவரும் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. முன்னதாக நாகர்கோவில் ஓட்டலுக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமியிடம் நிருபர்கள் பேட்டி கேட்டனர். அப்போது அவர் தனக்கு தொண்டை வலிப்பதாகவும் பேட்டி எதுவும் வேண்டாம் என சைகை மூலம் கூறி சென்றார்.

Tags : Edappadi ,Piyush Goyal ,Annamalai ,Nagercoil ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Modi ,Thoothukudi ,Madurai ,
× RELATED பட்டாசு பூமியில் பட்டைய கிளப்ப போவது யார்?