×

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் க.சுந்தருக்கு கிராமப்புறங்களில் உற்சாக வரவேற்பு

மதுராந்தகம், ஏப்.14: உத்திரமேரூர் தொகுதி திமுக வேட்பாளர் க.சுந்தர் கிராமப்புறங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, பட்டாசு வெடித்து, மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதி திமுக வேட்பாளர் க.சுந்தர் மருதம் கிராமத்தில் ஜீப்பில் நேற்று காலை தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது வேட்பாளர் சுந்தர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு பேசுகையில், திராவிட மாடல் ஆட்சி கொண்டு வந்த திட்டங்களை முழுமையாக நிறைவேற்றி கொடுத்துள்ளேன். பெண்கள் விருப்பப்பட்ட பொருட்களை வாங்குவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2.0 ஆட்சியில் ரூ.8 ஆயிரம் மதிப்பிலான கூப்பன் வழங்க உள்ளார். அதனைப் பெற்று அருகில் உள்ள கடைகளுக்கு சென்று விருப்பப்பட்ட பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

மேலும், ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. ஆகவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பேசினார்.
இதனைத் தொடர்ந்து, திருப்புலிவனம், மருத்துவன்பாடி, மல்லி கரணை, கடல்மங்கலம், சிருங்கோழி, பெருங்கோழி உள்ளி கிராமங்களில் வேட்பாளர் சுந்தர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு பிரசாரம் செய்ய சென்றபோது பட்டாசு வெடிக்கும், ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், பேரூர் செயலாளர் பாரிவள்ளல், பேரூராட்சி தலைவர் சசிகுமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் எழிலரசன் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளும், திமுக முன்னோடிகளும், இளைஞர்களும், மகளிர் அணியை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

Tags : Uthiramerur Assembly ,DMK ,K. Sundar ,Madhurantakam ,Uthiramerur ,Kanchipuram district ,Marutham ,
× RELATED தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர்...