×

இஸ்லாமியர்களுக்கு தனி கபர்ஸ்தான் கட்டி தருவேன்

செங்கல்பட்டு, ஏப்.18: செங்கல்பட்டு திமுக வேட்பாளர் கார்த்திக் தண்டபாணி கடந்த 15 நாட்களாக செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். இவருக்கு பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம், பள்ளிக்கூட தெருவில் உள்ள மசூதிகளில் தொழுகையை முடித்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வேட்பாளர் கார்த்திக் தண்டபாணி ஆதரவு திரட்டினார்.

அப்போது, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படியும், மீண்டும் திராவிட முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைந்திட ஆதரவு தரும்படியும் கேட்டுக் கொண்டார். மேலும் இஸ்லாமியர் சார்பில் வைத்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக செங்கல்பட்டு தொகுதியில் உள்ள இஸ்லாமியர்களுக்கு தனியாக கபர்ஸ்தான் கட்டிக் கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இதில் செங்கல்பட்டு நகர திமுக செயலாளர் எஸ்.நரேந்திரன், நகர்மன்ற துணைத் தலைவர் சி.வி.என்.குமாரசாமி, காங்கிரஸ் நகர தலைவர் பாலவிக்னேஷ், கம்யூனிஸ்ட் நகர தலைவர் வேலன், தேமுதிக நகர செயலாளர் முருகன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் முகமது யூனஸ், விசிக நகர செயலாளர்கள் ருத்ரகுமார், டேவிட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Chengalpattu ,DMK ,Karthik Dandapani ,
× RELATED வண்டலூர் ரயில் நிலையத்தில் இருந்து...