×

சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் வந்தே பாரத் சரக்கு ரயில்

சோழிங்கநல்லூர், ஏப்.19: ​உலக புகழ்​பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்​சாலை​யான சென்னை ஐசிஎப்​-ல், வந்தே பாரத் ரயில், எல்​எச்பி என்​னும் நவீன ரயில் பெட்டிகள், ஏசி மின்​சார ரயில், மெட்ரோ ரயில் உட்பட பல்​வேறு ரயில்​களுக்​கான பெட்​டிகள் தயாரிக்​கப்​படு​கின்​றன. குறிப்​பாக, வந்​தே ​பாரத் ரயில்கள் தயாரிப்​பில் அதிக கவனம் செலுத்​தப்​படு​கின்​றன. அந்த வகை​யில், வந்தே பாரத் சரக்கு ரயிலை வடிவ​மைத்​து, தயாரித்து வழங்க ரயில்வே வாரி​யம் கடந்த 2022ம் ஆண்டு உத்​தர​விட்டது. இதைத் தொடர்ந்​து, சரக்கு ரயில் வடிவ​மைப்​புக்கு ரயில்வே வாரி​யத்தின் ஒப்​புதல் பெறப்​பட்​டு, வந்தே பாரத் சரக்கு ரயில் தயாரிக்​கும் பணி சென்னை ஐசிஎப்​-ல் தொடங்கி நடை​பெற்று வந்​தது. இந்​நிலை​யில், அண்மையில் வந்தே பாரத் சரக்கு ரயில் தயாரிப்பு பணி முழு​மை​யாக நிறைவடைந்​தது.

16 பெட்​டிகளை கொண்ட இந்த ரயில், மணிக்கு 160 கி.மீ. வேகத்​தில் செல்​லும் திறன் கொண்​டது. உணவு பொருட்​களை பதப்​படுத்​தும் வசதி, பொருட்​களை பாது​காப்​பாக கையாளும் வசதி போன்​றவை இதில் இடம் பெற்றுள்​ளன. இந்த ரயில், ஐசிஎப்​-ல் இருந்து சோதனைக்​காக அனுப்பி வைக்​கப்​பட்​டது. விரை​வில், ஆராய்ச்சி வடிவ​மைப்பு மற்​றும் தரநிலை அமைப்​பால் (ஆர்​டிஎஸ்ஓ) முழு சோதனைக்கு உட்​படுத்​தப்பட இருக்கிறது. இதுகுறித்​து, ஐசிஎப் அதி​காரி​கள் கூறிய​தாவது: பெரிய நகரங்​களில் சரக்கு ரயில் தேவை அதி​கரித்​துள்​ளது. குறிப்​பாக, ஆன்லைனில் ஷாப்​பிங் செய்வது அதி​கரித்​துள்​ளது. அது​போல, உணவு பொருட்​கள் கையாள்​வதும் அதி​கரிக்​கிறது. இ-காமர்ஸ் நிறு​வனங்​கள், தங்​கள் பொருட்​களை பொது​மக்​களிடம் கொண்டு செல்​வதற்கு தற்​போது பெரிய அளவில் விமான போக்​கு​வரத்தை நம்​பு​கின்​றன. இந்த வணி​கத்​தில், வந்தே பாரத் சரக்கு ரயில் சேவை ஈடு​படுத்​தப்பட உள்​ளது.

ஒரே நேரத்​தில் 264 டன் சரக்​கு​களை இந்த ரயி​லில் எடுத்து செல்ல முடி​யும். உள்​பகுதி முழு​வதும் ஸ்டெ​யின்​லெஸ் ஸ்டீலால் வடிவ​மைப்​பு, தீ எச்சரிக்கை வசதி, சிசிடிவி கேம​ரா, சரக்கு கன்​டெய்​னர்​களை லாக் செய்வதற்கு வசதி உள்​ளிட்​டவை இடம் பெற்​றுள்​ளன. இந்த ரயில் பயன்​பாட்​டிற்கு வரும் முன்​பு, ஆராய்ச்சி வடிவ​மைப்பு மற்​றும் தரநிலைகள் அமைப்​பால் (ஆர்​டிஎஸ்ஓ) முழு​மை​யாகச் சோதிக்​கப்​படும். இதற்​காக, சென்னை ஐசிஎப்​-ல் இருந்து மத்​திய பிரதேசம், கஜூ​ராஹோவுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளது. தொடர்ந்​து, மத்​திய பிரசேதம் – ராஜஸ்​தான் இடையே சோதனை ஓட்​டம் நடை​பெறும். இதுதவிர, பல்​வேறு சோதனை​கள் மேற்​கொள்​ளப்​படும். இந்​திய ரயில்வே கட்​டமைப்​பில் வழக்​க​மாக சரக்கு ரயில்​கள் மணிக்கு 100 கி.மீட்டருக்​கும் குறை​வான வேகத்​தில் இயங்​கும். ஆனால், இந்த ரயில் மணிக்கு 160 கி.மீட்டர் வேகத்​தில் இயங்​கும் திறன் வாய்ந்​தது. நாட்​டின் மிக​வும் பரபரப்​பான சரக்கு போக்​கு​வரத்து வழித்​தடங்​களில் ஒன்​றான டெல்லி என்​சிஆர் – மும்பை மண்​டலங்​களுக்கு இடையே இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர்​கள் தெரிவித்​தனர்.

Tags : Chennai ICF ,Sholinganallur ,LHP ,Vande… ,
× RELATED தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர்...