விருதுகளுக்கு படங்களை அனுப்ப மாட்டேன்: மிஷ்கின்

சென்னை: என் படங்களை விருதுகளுக்கு அனுப்ப மாட்டேன் என இயக்குனர் மிஷ்கின் கூறியுள்ளார். அவர் கூறியதாவது: சினிமாத்துறை எல்லாமே ஒரே குடும்பம் தான். என் பக்கத்தில் இருப்பவனுக்கு தான் விருது கிடைத்திருக்கும். அப்படி நடக்கும்போது தட்டிக் கொடுக்க வேண்டும். நமக்கு கிடைக்கவில்லை என வருத்தப்படக் கூடாது. நான் இதுவரை எந்த விருதுகளுக்கு என் படங்களை அனுப்பியது கிடையாது.

இனி அனுப்பவும் போவதில்லை. மக்கள் டிக்கெட் வாங்கி படம் பார்த்து வெற்றியடைய வைத்துவிட்டால் அதைவிட வேறு என்ன விருது இருக்க முடியும்? ஒரு நல்ல விருது என்பது 25 வருடம் சினிமாவில் பணியாற்றிவிட்டு வெளியே செல்லும்போது, அவனது பிள்ளைகள் `என் அப்பா, என் தாத்தா பெரிய கலைமாமணி’ என சொல்ல வேண்டும். அதுதான் விருது என்றார்.

Related Stories: