போலீஸ் அதிகாரி ஆனார் வைபவ்

சென்னை: ‘மாறுவேஷம்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் வைபவ். இந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீனி கூறியது: மிஷ்கின் சாரிடம் உதவி இயக்குனராக இருந்துவிட்டு, இந்த படத்தை இயக்கியுள்ளேன். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஒரு குடும்பத்தில் நடக்கும் கொலையை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக வைபவ் நடிக்கிறார். இது மர்டர் மிஸ்டரி திரில்லர் படம் என்றாலும் ரத்தம், வன்முறை எதுவும் இருக்காது.

குடும்பத்துடன் பார்க்கும்படியான பேமிலி திரில்லர் கதையாக இருக்கும். வியானா ஹீரோயினாக நடிக்கிறார். ராம்கி, முனிஷ்காந்த், விவேக் பிரசன்னா, லிவிங்ஸ்டன், ஜார்ஜ் மரியன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு பாலாஜி கே.ராஜா. இசை – ராஜ்குமார் அமல். ஒனிரோமான்சி பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ், மங்கி மேன் கம்பெனியுடன் இணைந்து விஜய் ஆனந்த், நடிகர் வைபவ் தயாரித்துள்ளார். இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Related Stories: