ஆபாச போட்டோ அன்னா ராஜன் புகார்

மலையாள நடிகையான அன்னா ராஜன், ‘அங்கமாலி டைரீஸ்’ படத்தில் லிச்சி கதாபாத்திரத்தின் மூலம் பிரபலம் ஆனார். அதனை தொடர்ந்து ‘மதுர ராஜா’, ‘அய்யப்பனும் கோஷியும்’, ‘ரெண்டு’ உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்து பிரபலமானார். இந்நிலையில், அன்னா ராஜனின் புகைப்படம் ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக அன்னா ராஜன், கேரள காவல்துறை மற்றும் சைபர் க்ரைம் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், ‘‘இதுபோன்ற மார்பிங் செய்யப்பட்ட பதிவுகளை யாரும் பகிரவோ, ஆதரிக்கவோ வேண்டாம். சமூக வலைதளங்களில் பொறுப்புடன் செயல்படுங்கள்’’ என்று ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: