ஐ நோபடி விமர்சனம்…

வங்கியில் கொள்ளையடிக்கும் மூன்று மர்ம நபர்கள், அங்கிருக்கும் பிருத்விராஜ் சுகுமாரனை பிணைக்கைதியாக கடத்தும்போது, ஒருவரை பற்றிய ஆதாரம் பிருத்விராஜ் சுகுமாரனுக்கு கிடைக்கிறது. விபத்தில் மர்ம நபர்கள் மரணம் அடைகின்றனர். பிருத்விராஜ் சுகுமாரனுக்கு கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில், கொள்ளையர்கள் யார் என்று போலீசார் விசாரிக்கும்போது, அந்த கொள்ளைக்கும், பிருத்விராஜ் சுகுமாரனுக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு அவரையும், அவரது மனைவி பார்வதி திருவோத்து மற்றும் 2 மகள்களையும் டார்ச்சர் செய்கின்றனர்.

இறுதியில் கொள்ளையடித்தது யார்? யூகத்தின் அடிப்படையில் போலீசாரிடம் சிக்கிய பிருத்விராஜ் சுகுமாரனின் குடும்பம் என்ன ஆனது என்பது, பதற வைக்கும் கிளைமாக்ஸ். இயல்பான நடிப்பினால் தனது கேரக்டரை ஆழமாக பதிய வைக்கும் பிருத்விராஜ் சுகுமாரன், மனைவி பார்வதி திருவோத்து மற்றும் மகள்கள் மீது பாசம் செலுத்துவது நெகிழ வைக்கிறது. ஹக்கிம் ஷாஜகான், அசோகன், முதலமைச்சர் விஜயராகவன், டி.எஸ்.பி சங்கர் ராமகிருஷ்ணன், குற்றப்பிரிவு அதிகாரி மதுபால் உள்பட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

விசாரணை மற்றும் சண்டைக் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் கடுமையான உழைப்பு தெரிகிறது. எடிட்டர் ரமீஸ் எம்.பி பணி குறிப்பிடத்தக்கது. ஜேக்ஸ் பிஜாய் பின்னணி இசை, இன்னொரு ஹீரோ. யானிக் பென், கலை கிங்சன், அமித் ஜாலி பாஸ்டின் ஆகியோரின் சண்டைக் காட்சிகள் அதிர வைக்கின்றன. வங்கி கொள்ளையில் சாமானியன் சிக்கினால் என்ன நடக்கும் என்பதை விறுவிறுப்பான காட்சிகளின் மூலம் எழுத்தாளர் சமீர் அப்துல், இயக்குனர் நிசாம் பஷீர் கூட்டணி சொல்லியிருக்கிறது. படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

Related Stories: