ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோடியாக வைஷ்ணவி

தமிழில் ‘அடியே!’ என்ற படத்தின் வெற்றியை தொடர்ந்து, விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்தது. தெலுங்கில் ‘ரங் தே’, ‘பேபி’, ‘லவ் மீ’, ‘ஜாக்’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வைஷ்ணவி சைதன்யா, இதில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோடியாக நடிக்கிறார். இதன்மூலம் தமிழில் அவர் ஹீரோயினாக அறிமுகமாகிறார் இந்த காம்போ ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘திட்டம் இரண்டு’, ‘அடியே!’, ‘ஹாட் ஸ்பாட்’ 2 பாகங்கள் ஆகிய வித்தியாசமான கதைக்களங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி முத்திரை பதித்த விக்னேஷ் கார்த்திக், இம்முறையும் ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு படத்தை ரசிகர்களுக்கு தருவார் என்று தெரிகிறது. அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கான ஆயத்த பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். படத்தின் தலைப்பு மற்றும் இதர நடிகர், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

Related Stories: