×

பவிஷ் நாராயண், நாகதுர்கா ஜோடியின் லவ் ஓ லவ் டீசர் வெளியீடு

சென்னை, ஜூன் 17: ஜினிமா மீடியா அண்ட் எண்டர்டெயின்மெண்ட் லிமிடெட் சார்பில் தினேஷ் ராஜ், கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் ஜி.தனஞ்செயன் இணைந்து தயாரித்துள்ள படம், ‘லவ் ஓ லவ்’. மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ளார். ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ பவிஷ் நாராயண் (தனுஷின் சகோதரி மகன்), நாகதுர்கா, செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் நடித்துள்ளனர். உறவுகள் மீது அதிக ஈடுபாடு கொண்ட ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களை ெகாண்ட இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. பாக்ஸ்ன் (பிரதீப் பி.ஜே., வேய்ன் பேவி) இசை அமைக்க, பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். பா.மகேந்திரன் அரங்கம் அமைக்க, என்.பி.காந்த் எடிட்டிங் செய்துள்ளார். வரும் ஜூலை மாதம் படம் திரைக்கு வருகிறது.

Tags : Bhavish Narayan ,Nagadurga ,Chennai ,Dinesh Raj ,Zinima Media and Entertainment Limited ,G. Dhananjayan ,Creative ,Mahesh Rajendran ,Dhanush ,Selvaraghavan ,K.S. Ravikumar ,Vanitha Vijayakumar ,Ramya ,Aditya Kathir ,
× RELATED கூட்ட நெரிசலில் சிக்கிய ராஷ்மிகா பாதுகாத்து அழைத்து சென்ற கிரித்தி சனோன்