×

காட்டுக்குள் சிக்கும் போட்டோகிராபரின் திகில் அனுபவம்

சென்னை: ‘ரா’ (2014) திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்த, பைலட் மற்றும் நடிகருமான அஷ்ரஃப், ‘போட்டோகிராஃபர்’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து, இயக்கியுள்ளார். இவருக்கு ஜோடியாக ஜனனி நடித்துள்ளார். ‘சைக்காலஜிக்கல் சர்வைவல் மிஸ்டரி திரில்லர்’ பாணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

கருணாகரன், ஆடுகளம் நரேன், ‘உறியடி’ சிவா, தேவி மகேஷ், ஜே.பி. ஜெய், வேலா ராமமூர்த்தி, நிழல்கள் ரவி மற்றும் வெற்றிவேல் ராஜா நடித்துள்ளனர். வீரா என்ற புகைப்படக் கலைஞனைச் சுற்றியே இக்கதை நகர்கிறது. தனது திறமையை உலகிற்கு காட்ட வேண்டும் என்ற லட்சியத்தோடும், கடந்த காலத்தின் துயர நினைவுகளோடும், மதிக்கெட்டான் சோலை என்ற மர்மங்கள் நிறைந்த அடர்ந்த காப்பகக் காட்டுக்குள் நுழைகிறான்.

அங்கு, தனது வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஒரு அரிய இயற்கை நிகழ்வைப் புகைப்படம் எடுக்க முயல்கிறான். ஆனால், அவனது அந்த தேடல் ஒரு கட்டத்தில் அவனது உயிர் பிழைப்பிற்கான வேட்டையாக மாறுகிறது. அதன் பின் நடப்பதை திரில்லுடன் சொல்கிறது படம். இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ரயீஸ் அகமது (ஒளிப்பதிவு), ராஜ்குமார் சந்திரசேகரன் (இசை), ஆர்.சி. பிரணவ் (படத்தொகுப்பு) மற்றும் தினேஷ் சுப்பராயன் (சண்டைப் பயிற்சி) ஆகியோர் பணியாற்றியுள்ளனர். ஏபிஎஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ். அப்துல் பாசித் தயாரித்துள்ளார்.

Tags : Chennai ,Ashraf ,Janani ,Karunagaran ,Adaluram Narane ,Uriyadee' Shiva ,Devi Mahesh ,J. B. ,Jai ,Vela Ramamoorthy ,Shadowal Ravi ,Vathivel Raja ,Veera ,
× RELATED கூட்ட நெரிசலில் சிக்கிய ராஷ்மிகா பாதுகாத்து அழைத்து சென்ற கிரித்தி சனோன்