மும்பை: ராஷ்மிகா மந்தனா, கிரித்தி சனோன், ஷாகித் கபூர் நடித்துள்ள ‘காக்டெய்ல் 2’ இந்தி திரைப்படம், நாளை மறுநாள் வெளியாகிறது. ஹோமி அடஜானியா இயக்கியுள்ள இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி புனேவில் உள்ள வணிகவளாகம் ஒன்றில் நடைபெற்றது. இதற்காக ராஷ்மிகா மந்தனா, கிரித்தி சனோன், ஷாகித் கபூர் ஆகியோர் அங்கு சென்றனர்.
இவர்களைக் கண்டதும் ரசிகர்கள் பாதுகாப்பு தடுப்புகளை உடைத்துக் கொண்டு முண்டியடித்ததால் அந்த இடம் பரபரப்பானது. பாதுகாப்புக் காரணங்களால் நிகழ்ச்சி பாதியிலேயே ரத்துச் செய்யப்பட்டது. கூட்ட நெரிசலில் இருந்து ஷாகித் கபூர் கோபத்துடன் வெளியேறினார். கூட்ட நெரிசலுக்கு நடுவே, கிரித்தி சனோன், ராஷ்மிகா சிக்கிக்கொண்டனர். உடனடியாக ராஷ்மிகா மந்தனாவைத் தன்கைகளால் அரவணைத்துப் பாதுகாத்தார் கிரித்தி. பாலிவுட்டில் இதுபோன்ற சம்பவங்களை பலமுறை கிரித்தி எதிர்கொண்டுள்ளார். ராஷ்மிகாவுக்கு முதல்முறை என்பதால் அவரை பத்திரமாக தனது சகோதரி போல் பாதுகாத்து அழைத்து சென்று காரில் அமர வைத்தார் கிரித்தி. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
கிரித்தி சனோனின் இந்த பாதுகாப்பு உணர்வை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். அதோடு நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களைக் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.
