இன்ஸ்டா சப்ஸ்கிரிப்ஷன் மூலம் லட்சங்களை குவிக்கும் நடிகைகள்: பரபரப்பு ரிப்போர்ட்

சென்னை: நடிகைகள் பலர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சப்ஸ்கிரிப்ஷன் (Subscription) முறையை அறிமுகப்படுத்தி, பிரத்யேக புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை வழங்கி வருகின்றனர். இது ரசிகர்களை நேரடியாக இணைக்கவும், அவர்களுக்கு பிரத்யேக கன்டென்டை வழங்கவும் உதவுகிறது.

சப்ஸ்கிரிப்ஷன் மூலம் ரசிகர்கள் என்ன பெறலாம்?
திரைப்படங்களின் படப்பிடிப்பு தளங்கள் மற்றும் போட்டோஷூட்டுகளின்போது எடுக்கப்படும் காட்சிகள். சாதாரண ஃபாலோயர்களுக்கு காட்டப்படாத தனிப்பட்ட வி.எல்.ஓ.ஜி மற்றும் உடற்பயிற்சி வீடியோக்கள். நடிகைகளுடன் நேரலையில் பேசுதல், பிரத்தியேகமாக நடத்தப்படும் கேள்வி – பதில் செஷன்கள். தங்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகைகளின் இன்ஸ்டாகிராம் ப்ரொஃபைலுக்குச் சென்று, சப்ஸ்கிரைப் பட்டனை கிளிக் செய்வதன் மூலம் இந்த பிரத்யேக சேவைகளில் இணைய முடியும்.

தர்ஷா குப்தா: தமிழ் திரைப்படங்கள் மூலம் பிரபலமான இவர், இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.
மாத வருமானம்: சுமார் ₹4 லட்சம் முதல் ₹4.3 லட்சம் வரை.சப்ஸ்கிரைபர்கள்: சுமார் 750 நபர்கள்.ரைசா வில்சன்: ‘பியார் பிரேமா காதல்’ உள்பட பல பட நடிகையான இவர் சமீபத்தில் சப்ஸ்கிரிப்ஷன் சேவையைத் தொடங்கினார்.மாத கட்டணம்: ₹290. மாத வருமானம்: ஆரம்பகட்டமாக சுமார் 650 சப்ஸ்கிரைபர்களுடன் ₹1.8 லட்சத்துக்கும் அதிகமாக ஈட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்திய அளவிலான முன்னணி நடிகைகளின் வருமானம்:
நேஹா சர்மா: பாலிவுட் மற்றும் தென்னிந்திய படங்களில் நடித்த இவர்தான் தற்போது இந்திய அளவில் இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் அதிக வருவாய் ஈட்டும் நடிகைகளில் முதலிடத்தில் உள்ளார். மாத கட்டணம்: ₹299. சப்ஸ்கிரைபர்கள்: 10,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள். மாத வருமானம்: சுமார் ₹24 லட்சம் முதல் ₹29 லட்சம் வரை. அனன்யா நாகல்லா, அஷு ரெட்டி, நந்திதா ஸ்வேதா, ஜனனி அசோக்குமார், பூனம் பஜ்வா உள்பட பல நடிகைகள் இதுபோல் வருமானம் ஈட்டுகிறார்கள்.

வருமானம் கணக்கிடப்படும் முறை மற்றும் நிபந்தனைகள்:
நடிகைகள் நிர்ணயிக்கும் மாதக் கட்டணத்தை (பெரும்பாலும் ₹290 – ₹300) மொத்த சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கையுடன் பெருக்கி இந்த வருமானம் கணக்கிடப்படுகிறது. இந்த மொத்த வருவாயில் ஆப்பிள் ஆப் ஸ்டோர்/கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் இன்ஸ்டாகிராம் தங்களின் குறிப்பிட்ட சதவிகிதப் பங்கைக் கழித்துக் கொண்ட பிறகே மீதித் தொகை நடிகைகளுக்குச் சென்றடையும்.

நடிகை கிரணுடன் நேரடியாக 15 நிமிடங்கள் வீடியோ காலில் பேசுவதற்குச் சுமார் ₹15,000 முதல் ₹25,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரசிகர்களின் பெயர்களைக் கூறி ஆடியோ அனுப்புவதற்கும் தனிப்பட்ட முறையில் மெசேஜ் செய்வதற்கும் தனித்தனி பிரீமியம் பிளான்கள் கிரணிடம் உள்ளன. இவருக்கு மாதம் தோறும் ₹10 லட்சம் வரை வருவாய் கிடைக்கிறது. இது மட்டுமின்றி பல நடிகைகள் தங்களது ஆபாச புகைப்படங்களை வெளியிட்டு பணம் சம்பாதிக்கும் வேலையிலும் இந்த சப்ஸ்கிரிப்ஷன் முறையில் ஈடுபடுகின்றனர். இதனால் சமூக ஆர்வலர்கள் பலர் இந்த சப்ஸ்கிரிப்ஷன் முறையை எதிர்த்து வருகிறார்கள்.

Related Stories: