×

பாடலை எழுதி ஏஐ-யில் உருவாக்கும் பாடலாசிரியர்

சென்னை: ‘லைசன்ஸ்’, ‘உள்ளொளி’, ‘துளிர்’ உள்பட பல படங்களுக்கா பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் ஏ.இரமணிகாந்தன். இப்போது தனது மெட்டுக்களோடு கூடிய பாடல் வரிகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (ஏஐ) பயன்படுத்தி சிறப்பான இசை வடிவத்தை அமைத்து கொடுத்து இருக்கிறார். இம்முயற்சி திரைத் துறையினருக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கிறது.

இந்த ரெடிமேட் பாடல்களை இயக்குனர்கள் பலரும் தங்களது படங்களுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். இதுபோல் ஆயிரம் பாடல்களை உருவாக்கி இரமணிகாந்தன் சாதித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர்களுக்கு இந்த ஆயத்த பாடல் வடிவம் ஓர் பெருவிருந்தாக நிச்சயம் அமையும். ஆயிரம் பாடல்களை தொடர்ந்து ஐந்தாயிரம் பாடல்களை உருவாக்குவது இலக்காக உள்ளது’’ என்றார்.

Tags : Chennai ,A. Ramanikanthan ,Ramanikanthan ,
× RELATED மனதில் பட்டதை பேசும் சம்யுக்தா