×

டபுள் ஆக்குபன்ஸி விமர்சனம்

போஸ் வெங்கட், வினோதினி வைத்தியநாதன் தம்பதிக்கு பிறக்கும் ஆண் குழந்தை, திடீரென்று பெண் குழந்தையாக மாறுகிறது. காலை 6 முதல் மாலை 6 மணி வரை பெண்ணாகவும், மாலை 6 முதல் காலை 6 மணி வரை ஆணாகவும் மாறும் குழந்தைக்கு வளர்ந்த பிறகு வரும் சிக்கல்களே இந்த படத்தின் சுவாரஸ்யமான திரைக்கதை. ரஜினி என்ற பெயரில் ஆணாக சந்தோஷ், பெண்ணாக ரேஷ்மா வெங்கடேஷ் நடித்துள்ளனர்.

அறிவியல்பூர்வமாக இதிலிருந்து எப்படி விடுபடுவது என்று, ‘ஜெனிடிக்ஸ்’ துறையில் ஆய்வு செய்வது, காதலனிடம் நிஜத்தை சொல்ல முடியாமல் தவிப்பது என்று ரேஷ்மா வெங்கடேஷ் நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார். அவரது காதலன் வினோத் கிஷன், காமெடியில் பளிச்சிடுகிறார். காதல் மற்றும் ஸ்டண்ட் காட்சிகளில் சந்தோஷ் சிறப்பாக நடித்துள்ளார். அவரது காதலியாக வரும் சம்யுக்தா விஸ்வநாதன், லிப்லாக் மற்றும் நெருக்கமான காட்சிகளில் கலக்கியுள்ளார். விடிவி கணேஷின் காமெடி கூடுதல் பலம்.

பக்ஸ், விச்சு விஸ்வநாத், போஸ் வெங்கட், வினோதினி வைத்தியநாதன் ஆகியோர் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளனர். ஒரு நிமிடம் அசந்தால் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிடும் கதையை சுவாரஸ்யமாக சொன்ன இயக்குனர் அஸ்வின் கந்தசாமி, ஜென்-ஸீ தலைமுறைக்காக யோசித்திருக்கிறார். அது சோடை போகவில்லை. சாந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு, தரம். எடிட்டிர் பிரவீன் ஆண்டனி பணி குறிப்பிடத்தக்கது. சாம் சி.எஸ் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ரகம். பின்னணி இசையில் படத்தை தாங்கிப் பிடித்துள்ளார்.

Tags : Bose Venkat ,Vinothini Vaidyanathan ,Santhosh ,Rajini ,Reshma Venkatesh ,
× RELATED மனதில் பட்டதை பேசும் சம்யுக்தா