கர்நாடக இசை மேதை ஒய்.ஜி.மகேந்திரனுக்கு மனைவி சுஹாசினி மீது கொள்ளைப்பிரியம். அவர்களின் ஒரே மகன் ராஜ் ஐயப்பா, மாடர்ன் இசை அமைப்பாளர். அவரிடம் பாட வந்த ரம்யா பாண்டியன், அவரை காதல் திருமணம் செய்கிறார். மாமனார், மாமியாரை பற்றிய ஒரு ரகசியத்தை அம்பலப்படுத்துகிறார். அதை நோக்கி படம் நகர்கிறது. பல வருட நடிப்பு அனுபவத்தை வழங்கி, சாருகேசியாகவே வாழ்ந்துள்ளார் ஒய்.ஜி.மகேந்திரன். சுஹாசினி, தலைவாசல் விஜய் முதிர்ச்சியான நடிப்பை வழங்கியுள்ளனர்.
திரைப்பட இயக்குனராக சமுத்திரக்கனி, ராகதேவன் என்ற கடவுள் அவதாரமாக சத்யராஜ் சிறப்பு வேடத்தில் அசத்தியுள்ளனர். ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பா ஜோடிப் பொருத்தம் சிறப்பு. ஜெயப்பிரகாஷ், மதுவந்தி நடிப்பு சிறப்பு. பாடல்களிலும், பின்னணி இசையிலும் கர்நாடக இசையை தேவா பொருத்தமாக வழங்கியுள்ளார். சஞ்சய்.பி.எல் ஒளிப்பதிவு ஆங்காங்கே டிராமா மேக்கிங்கில் இருக்கிறது. பா.விஜய்யின் வசனங்களும், பாடல்களும் ஓகே ரகம். பழை கதையென்றாலும் புதிதாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.

