×

மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனரின் பாலன் பட டிரெய்லர் ரிலீஸ்

சென்னை: ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த சிதம்பரம் இயக்கியுள்ள ‘பாலன் தி பாய்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாயிர், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. இந்தப் படம் ரூ.200 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து சிதம்பரம் இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள படம் ‘பாலன் – தி பாய்’.

ஃபஹத் பாசில் நடிப்பில் வெளியான ‘ஆவேஷம்’ படத்தின் இயக்குனர் ஜித்து மாதவன் இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ளார். சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ள இந்தப் படத்தை கேவிஎன் புரொடக்‌ஷன் தயாரித்துள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. போராளியான தாய்க்கும் அவரது மகனான சிறுவனுக்கும் இடையிலான பாசத்தை படம் சொல்கிறது என்பதை டிரெய்லரில் காண்பித்துள்ளனர். வரும் ஜூன் 19ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

Tags : Manjummal Boys ,Balan ,Chennai ,Chidambaram ,Chaupin Shair ,Srinath Bassi ,
× RELATED பெத்தி விமர்சனம்