×

அமெரிக்கா போட்டிக்கு செல்ல முடியாமல் தவித்த நடனக்குழுவுக்கு ரூ.35 லட்சம் தந்து உதவிய விஜய் சேதுபதி மகன்

சென்னை, ஜூன் 7: பெங்களூரைச் சேர்ந்த பிரபல நடனக் குழுவான Crew 8e1 அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் Body Rock USA 2026 World Finals போட்டிக்கு தேர்வாகியுள்ளது. சென்னையைச் சேர்ந்த சாண்டி சுந்தர் இந்த 16 பேர் கொண்ட நடனக் குழுவிற்கு பயிற்சியாளராக இருந்து வருகிறார். அமெரிக்காவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ளவும் அங்கு தங்குவதற்காகவும் தங்களுக்கு 35 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் தங்களுக்கு உதவும்படியும் இந்த குழு தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டனர்.

இதனைப் பார்த்த விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி தன்னால் முடிந்த உதவிகளை அந்த அணிக்கு செய்து கொடுத்துள்ளார். அதேபோல் நடனக் கலைஞர்களுக்கு விசா கிடைப்பதில் இருந்த பிரச்னைகளையும் சூர்யா சேதுபதி சரிசெய்து கொடுத்திருக்கிறாராம் விஜய் சேதுபதி பலருக்கும் பல வித உதவிகளை செய்து வருகிறார்.

தனது தந்தையைப் போலவே சூர்யா சேதுபதி இந்த வயதிலேயே மற்றவர்களுக்கு உதவி செய்வது பாராட்டிற்குரிய விஷயம் என ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள். சூர்யா சேதுபதி, கடந்த ஆண்டு வெளியான ‘ஃபீனிக்ஸ்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

Tags : Vijay Sethupathi ,US ,Chennai ,Bengaluru ,Crew 8e1 ,Body Rock USA 2026 World Finals ,Sandy Sundar ,
× RELATED பெத்தி விமர்சனம்