×

சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துறாங்க: ரவி மோகனுக்கு ஆதரவாக மீரா சோப்ரா அதிரடி

மும்பை: சமீபத்தில் பேட்டியளித்த ரவிமோகன், தனது பிள்ளைகளை பார்க்க விடாமல் மனைவி ஆர்த்தி, மாமியார் சுஜாதா தடுப்பதாக புகார் கூறினார். இந்த மனஉளைச்சலால் தான் 2 முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் சொன்னார். மேலும் தனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை படங்களில் நடிக்கப்போவதில்லை என்றும் அறிவித்தார். இதனால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ரவி மோகனுக்கு ஆதரவாக எந்த நடிகரும் குரல் எழுப்பாத நிலையில், நடிகை ஒருவர் அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறார். அர்ஜுன், வடிவேலு நடித்த ‘மருதமலை’, எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘அன்பே ஆரூயிரே’, பிரசாந்த் நடித்த ‘ஜாம்பவான்’ உள்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் மீரா சோப்ரா.

இவர் பிரியங்கா சோப்ராவின் உறவினர். அவர் மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கூறியதாவது: ரவி மோகனை எனக்கு நன்றாக தெரியும். நான் தென்னிந்திய சினிமாவில் நடித்தபோது அவருடன் பணியாற்றி இருக்கிறேன். தற்போது தான் அவரது விவாகரத்து செய்தியை பார்த்தேன். எல்லா நேரத்திலும் தவறு செய்பவர் ஆண்கள் மட்டும் இல்லை. பெண்களுக்கு சாதகமாக இருக்கும் சட்டங்களை சிலர் தவறாக பயன்படுத்திக் கொள்வதையும் நாம் பார்த்திருக்கிறோம்.

ஒரு ஆணின் குரலும் கேட்கப்பட வேண்டும். ரவி மோகன் மிகவும் எளிமையான மற்றும் இனிமையான மனிதாராக நான் பார்த்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரவி மோகன், சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்து விரதம் மேற்கொண்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags : Meera Chopra ,Ravi Mohan ,MUMBAI ,RAVIMOGAN ,ARTHI ,Arjun ,Vadiveli ,S. J. Surya ,
× RELATED ஹீரோ ஆகிறார் துஷாந்