×

இஸ்லாமிய படம் என்று சுருக்கிவிடாதீர்கள்: ‘ஹபீபி’ பற்றி அமீர் பேச்சு

சென்னை: நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்‌ஷன்ஸ், ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், மீரா கதிரவன் எழுதி இயக்கியுள்ள படம், ‘ஹபீபி’. கஸ்தூரிராஜா, மாளவிகா மனோஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நாசர், இயக்குனர்கள் வெற்றிமாறன், பார்த்திபன், மிஷ்கின், சேரன், சுசீந்திரன், சமுத்திரக்கனி, பா.ரஞ்சித், பாண்டிராஜ், ராம், மகிழ் திருமேனி, கணேஷ் கே.பாபு, ஹரிஹரன் ராம், தினகரன் சிவலிங்கம், அவினாஷ், சுரேஷ் ராஜகுமாரி, ஜகாரியா முகமது, லீனா மணிமேகலை, வி.இசட்.துரை, தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், பாடகர் சத்யன், நடிகைகள் ஈஷா, மாளவிகா மனோஜ், இசை அமைப்பாளர் சாம் சி.எஸ் கலந்துகொண்டனர்.

அப்போது அமீர் பேசுகையில், ‘ஹபீபி என்றால் அன்பு, காதல் என்று அர்த்தம். அதுபோன்ற வாழ்க்கையை வாழ்ந்தவர்களால்தான் இந்த படத்தை உருவாக்க முடியும். இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த படம் என்று இதை சுருக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. தமிழ் சமூகம் உருவாக்க மறந்த ஒரு சமூகத்தை சேர்ந்த படம் என்று சொல்லலாம்’ என்றார். கஸ்தூரிராஜா பேசும்போது, ‘நான் ஆயிரம் சதவீதம் இந்து. அப்படி இருந்த என்னை இந்த கதை இஸ்லாமியராக மாற்றியது.

இந்த நிகழ்வு எனக்கு மறுபிறவி போலிருக்கிறது. என்னை நான் ஒரு நடிகனாகவே அங்கீகரிக்கவில்லை. எனவே, தியேட்டரில் மக்களுடன் அமர்ந்து பார்க்க காத்திருக்கிறேன். மீரா கதிரவனுடைய போராட்டத்துக்கு இந்த படம் நல்ல விளைச்சல் கொடுக்கும்’ என்றார்.

Tags : Amir ,Habibi ,Chennai ,Neesam Entertainment ,GKS Pros Productions ,Romeo Pictures ,Meera Katrawan ,Kasturiraja ,Malavika Manoj ,Nassar ,Vitimaran ,Parthiban ,Mishkin ,Cheran ,Susindran ,Samuthrakani ,Pa. Ranjit ,Pandraj ,Ram ,Magil Thirumeni ,Ganesh K. Babu ,Hariharan Ram ,Dinakaran Sivalingam ,Avinash ,Suresh Rajakumari ,Zakaria Mohammed ,Lena Manimegalle ,V. Z. Durai ,B. L. Thenappan ,
× RELATED ஹீரோ ஆகிறார் துஷாந்